ஏப். 1 முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி


ஏப். 1 முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 23 March 2021 9:47 AM GMT (Updated: 23 March 2021 9:47 AM GMT)

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் உள்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, மார்ச் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்த்தது. 

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

Next Story