ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி


ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல் சம்பந்தபட்டவர்களுக்கு  எதிராக கடுமையான நடவடிக்கை  உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
x
தினத்தந்தி 24 March 2021 5:05 PM GMT (Updated: 24 March 2021 5:05 PM GMT)

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாகக் கூறப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளிதுள்ளார்.

திருவனந்தபுரம்

ரெயிலில் டெல்லியின் நிஜாமுதீனில் இருந்து ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு  2 கன்னியாஸ்திரிகள் மற்றும் 2 கிறிஸ்தவ பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் ரெயிலில் மதமாற்றம் செய்ய முற்பட்டதாக ஏபிவிபி உறுப்பினர்களால் குற்றம்சாட்டபட்டு ஜான்சி ரெயில் நிலையத்தில்  இறக்கி விடப்பட்டனர்.

ரெயில்வே அதிகாரிகளின் விசாரணையில் அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெற இல்லை என்று கண்டறியப்பட்ட பின்னர் நான்கு பேரும் தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் மார்ச் 19 அன்று நடந்தது.  இந்த சம்பவம் குறித்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள்  துன்புறுத்தபட்டது “அதிர்ச்சியூட்டும்” செயல் என்று கூறி உள்ளார்.

"தனிப்பட்ட உரிமைகளின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் மற்றும் பாதிக்கும் அனைத்து குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும்" எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஷா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் அதில் கோரிக்கை வைத்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஜான்சி வழியாக ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாகக் கூறப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  உறுதியளிதுள்ளார்.

கேரளாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அமித்  ஷா, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன்  கொண்டு வரப்படுவார்கள் என்று நான் கேரள மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என கூறினார்.

Next Story