வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் அடுத்த மாதம் பாதயாத்திரை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 31 March 2021 11:48 PM GMT (Updated: 31 March 2021 11:48 PM GMT)

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.


புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்தவகையில் நாடாளுமன்றம் நோக்கிய பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் அரசு தூங்குகிறது. எனவே அரசை எழுப்புவதற்காக போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளோம். அந்தவகையில் நாடாளுமன்றம் நோக்கி அடுத்த மாதம் (மே) பாதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று கூறினர்.


Next Story