மகள் கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி விடுதலையான தொழில் அதிபர் தற்கொலை;கற்பழிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடிதத்தில் வலியுறுத்தல்


தற்கொலை செய்த புடியோக்கட பாரத்
x
தற்கொலை செய்த புடியோக்கட பாரத்
தினத்தந்தி 2 April 2021 9:38 PM IST (Updated: 2 April 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

மகள் கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி விடுதலையான தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் கற்பழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா மரகோடு கிராமத்தை சேர்ந்தவர் புடியோக்கட பாரத் (வயது 55). 

பாலியல் புகாரில் சிக்கி விடுதலையானவர்

இவர் தொழில் அதிபர். இவர் மீது இவரது மகள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இதுதொடர்பாக பாரத் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு பாரத் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது. 

தன் மீதே தனது மகள் பாலியல் புகார் கூறியதால் பாரத் மனம் உடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பாரத்திற்கு அவரது மகளும், மனைவியும் உளவியல் ரீதியாத அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

தற்கொலை

இதனால் மனம் உடைந்த பாரத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு பாரத் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் மடிகேரி புறநகர் போலீசார் விரைந்து வந்து, பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக பாரத் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி கொண்டனர். 
அந்த கடிததத்தில் பாரத் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு சட்டத்தில் திருத்தம்

எனது மகள் தொடர்ந்த  பாலியல் புகார் வழக்கில் நான் நிரபராதி என கோர்ட்டு விடுவித்தது. இருப்பினும் எனது மனைவியும், மகளும் எனக்கு கடுமையான மனரீதியாக சித்ரவதை செய்து வந்தனர்.
 
எனவே நான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இந்த முடிவை தேடுகிறேன். நமது நாட்டில் கற்பழிப்பு தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக மடிகேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story