திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் பாறையை ஹெலிகாப்டரில் இருந்து படம்பிடித்த பிரதமர் மோடி


திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் பாறையை ஹெலிகாப்டரில் இருந்து படம்பிடித்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 April 2021 10:08 AM GMT (Updated: 3 April 2021 10:48 AM GMT)

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை ஹெலிகாப்டரில் இருந்து படம்பிடித்து வீடியோவாக எடுத்து பிரதமர் மோடி பதிவிட அது வைரலாக பரவியது.


புதுடெல்லி,

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை வீடியோவாக எடுத்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் இரவு மதுரை வந்த மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, நேற்று காலை மதுரையில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்ற மோடி, பின் கன்னியாகுமரி சென்றார்.

நாகர்கோவிலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள செல்லும்போது, ஹெலிகாப்டரில் இருந்தபடியே விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில், கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என புகழாரம் சூட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 4.87 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.


Next Story