சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்


சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்
x
தினத்தந்தி 6 April 2021 5:38 AM GMT (Updated: 6 April 2021 5:38 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்து ஜனாதிபதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டின்  தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேவிற்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.

இதற்கு, சுப்ரீ கோர்ட்டின்  அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ராமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார்.

போப்டேவுக்கு அடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ராமணா. ஆகவே, தலைமை நீதிபதிபரிந்துரை 
செய்தார்.

தற்போது  பரிந்துரை ஏற்கப்பட்டு  பட்சத்தில் என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டின்  அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.

புதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில்  தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் என்.வி. ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story