கொரோனா பரவல் எதிரொலி: மும்பை மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
மும்பை மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் மற்ற மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த பார்வையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவசர தேவைகளுக்கு வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் பாஸ் வழங்கலாம். இதற்காக சம்பந்தப்பட்ட நபர்கள் 48 மணி நேரத்திற்கு மிகாத ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து நுழைவு வாயிலில் மனுக்களை வாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story