கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக்கொண்டார் சரத் பவார்
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சரத் பவார் எடுத்துக்கொண்டார்.
மும்பை,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் முதியவர்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. இந்த நிலையில், இன்று சரத் பவார் தடுப்பூசியின் 2-ஆம் டோஸை இன்று எடுத்துக்கொண்டார்.
Related Tags :
Next Story