200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியமைக்கும் - அமித்ஷா நம்பிக்கை
200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவே இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராஜூப் பானர்ஜியை ஆதரித்து அம்மாநிலத்தின் டோம்ஜூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின்போது பேசிய அமித்ஷா, நான் இங்கு ஒரேஒரு கிராம பஞ்சாயத்தை மட்டும்தான் பார்வையிட்டேன். ஆனால், அங்குள் உற்சாகத்தை பார்க்கும்போது பெரும்பான்மையுடன் ராஜூப் பானர்ஜி வெற்றிபெறுவார் என்று நான் நம்புகிறேன்.
மே 2-ம் தேதி மேற்குவங்காளத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைக்கும். மம்தா பானர்ஜியின் பேச்சு மற்றும் நடத்தையை பார்க்கும்போது அவர் மிகுந்த வெறுப்பில் உள்ளார் என்று தெரிகிறது’ என்றார்.
Related Tags :
Next Story