தேசிய செய்திகள்

பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா + "||" + Kerala Assembly Speaker P Sreeramakrishnan Tests Positive for Covid-19, Under Observation at Home

பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா

பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா
பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருகிறது. இந்த கொரோனாவால் பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த வரிசையில் மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.