ஏப்ரல் 18-ம் தேதி ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை செயல்படாது - ரிசர்வ் வங்கி


ஏப்ரல் 18-ம் தேதி ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை செயல்படாது - ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 12 April 2021 5:53 PM GMT (Updated: 12 April 2021 5:53 PM GMT)

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பணிதொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

என்இஎப்டி தடை ஏற்படாதுஅதே சமயம் என்.இ.எப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story