ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும்- சுகாதாரத்துறை


ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும்- சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 13 April 2021 10:17 AM GMT (Updated: 13 April 2021 10:17 AM GMT)

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 21 நாள்கள் இடைவெளியில் 0.5 மி.லி. என்ற அளவில் 2 தவணைகளாக செலுத்தப்படும்  எனவும் -18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3வது தடுப்பூசி இதுவாகும்.

Next Story