அம்பன் புயல் பாதிப்பு: பிரதமர் மோடி கொடுத்த நிதியை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சாப்பிட்டுவிட்டனர் - ஜேபி நட்டா குற்றச்சாட்டு


அம்பன் புயல் பாதிப்பு: பிரதமர் மோடி கொடுத்த நிதியை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சாப்பிட்டுவிட்டனர் - ஜேபி நட்டா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2021 12:33 AM GMT (Updated: 15 April 2021 12:40 AM GMT)

அம்பன் புயல் பாதிப்பு நிவாரணமாக பிரதமர் மோடி கொடுத்த நிதியை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விழுங்கிவிட்டனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் அப்பாஸ் சித்திக்யூ என்பவரின் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் அசன்சூல் பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தின் போது பேசிய ஜேபி நட்டா, மேற்குவங்காளத்திற்கு அம்பன் புயல் பாதிப்பு நிதியாக பிரதமர் மோடி 2,772 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது இது தொடர்பாக தற்போது மத்திய தணிக்கை ஆய்வு குழு ஆய்வை விட்டு மேற்குவங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு தப்பி ஓடுகிறது. ஏனென்றால் கொடுக்கப்பட்ட பணம் அனைத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சாப்பிட்டுவிட்டனர். இது ஒன்றும் சிறிய அளவிலான பணம் கிடையாது. மக்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை, மக்களின் படகுகள் இன்னும் பழுது நீக்கப்படவில்லை’ என்றார். 

Next Story