தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - ராகுல் காந்தி + "||" + Corona damage; I wish former Prime Minister Manmohan Singh a speedy recovery - Rahul Gandhi

கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - ராகுல் காந்தி

கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தன் கோர முகத்தைக்காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்கானித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங்ஜி உடல்நலம் பெற்று, விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேவை என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மன்மோகன் சிங் விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.