செவிலியரை கத்தியால் குத்திய கொரோனா நோயாளி

மும்பையில் செவிலியரை கத்தியால் குத்தியதால் கொரோனா நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவிலியரை கத்தியால் குத்திய கொரோனா நோயாளி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள மலபார் மலை காவல் எல்லைக்குள்பட்ட மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவர் செவிலியரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் மலபார் மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com