டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,638- பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,638- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 5:45 PM GMT (Updated: 21 April 2021 5:45 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24, 638- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் காட்டுத்தீ போல பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.

டெல்லியில் நேற்று 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது. டெல்லியில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகத்தான் இருந்தது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 638- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 24,600- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 249- பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து  179- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  8 லட்சத்து 31 ஆயிரத்து 179- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,887- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 85,364- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story