மும்பையில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


மும்பையில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 3:41 AM GMT (Updated: 25 April 2021 3:41 AM GMT)

நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா பரவல் தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் மாநிலங்களில் மராட்டியம் தான் முதலிடம் வகித்தது. குறிப்பாக மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. நாட்டின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பல நாட்கள் பதிவாகி அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புதிதாக வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் மக்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று 5,888 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த வியாழன்று 7 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிசயிக்கும் வகையில் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 888-ஆக இருந்தது.

 ஒரு நாளில் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 


Next Story