அரியானா: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 5-பேர் உயிழப்பு


அரியானா: ஆக்சிஜன்  தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 5-பேர் உயிழப்பு
x
தினத்தந்தி 26 April 2021 7:59 AM GMT (Updated: 26 April 2021 7:59 AM GMT)

அரியானாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குர்கான்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல முன்னணி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.  

இந்த நிலையில், அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நோயாளிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரியானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக நேற்று குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ரேவேரியில் உள்ள மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் காரனமாக விசாரணைக்கு மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.


Next Story