டெல்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்- கெஜ்ரிவால்


டெல்லியில் ஒரு மாதத்திற்குள்  44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்- கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 27 April 2021 9:28 AM GMT (Updated: 27 April 2021 9:28 AM GMT)

டெல்லியில் புதிதாக 44 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் முறையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம்.  

அதில் மத்திய அரசு 8 நிலையங்களும், மாநில அரசு 36 நிலையங்களும் உருவாக்க உள்ளது. 21 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்களை பிரான்ஸ் நாட்டிலிருந்தும், 15 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் இந்தியா கம்பெனிகளிடம் வாங்கப்பட உள்ளது. பேங்காங்கில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது” என்றார். 

Next Story