தேசிய செய்திகள்

எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொலை + "||" + Eight-month pregnant 'drug queen' shot dead by fourth husband in Delhi's Nizamuddin, CCTV captures crime

எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொலை

எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொலை
டெல்லியின் நிஜாமுதீனில் எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புதுடெல்லி

டெல்லியில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவரால் சுட்டு கொல்லப்பட்டார். 

டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியயை சேர்ந்தவர் சாய்னா (வயது 29) , இவர் நான்காவது கணவர்  வசீம். சாய்னாவின்  முதல் இரண்டு கணவர்கள் அவரை விட்டு பிரிந்து வங்காளதேசம் சென்று விட்டனர். அவரது மூன்றாவது திருமணம் டெல்லி போதைப் பொருள் மன்னன் என்றும் அழைக்கப்படும் ஷராபத் ஷேக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் நடந்தது. ஷேக் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

இந்த நிலையில்  வசீமை கடந்த  ஒரு வருடத்திற்கு  முன்பு சாய்னா திருமணம் செய்து கொண்டார். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவர் திருமணமான உடனேயே கைது செய்யப்பட்டார். அவர் எட்டு மாத கர்ப்பிணி என்ற  அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சாய்னா கைது செய்யப்பட்ட பின்னர், வசீம் அவருக்கு சகோதரி முறைவரும் ரெஹானா என்ற பெண்ணுடன்  தொடர்பு வைத்திருந்தார். சாய்னா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் ரெஹானாவுடனான அவரது உறவு பாதிக்கப்பட்டது. சாய்னா ரெஹானாவுடனான உறவு  குறித்து  அடிக்கடி சண்டையிட்டார்.

சாய்னாவிடமிருந்து விடுபட்டு   ரெஹானாவுடனான உறவைத் தொடர வசீம் முடிவு செய்தார்.சாய்னாவை கொலை செய்ய திட்டமிட்ட அவர், நேற்று இரண்டு கைத்துப்பாக்கிகளையும் கொண்டு வந்தார்.

நேற்று காலை 10 30 மணி அளவில் சாய்னா வீட்டிற்கு வந்த வசீம் சாய்னாவை பலமுறை சுட்டு உள்ளார். இதில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சாய்னா பலியானார்.  துப்பாக்கி சூடை தடுக்க வந்த சாய்னா  வேலைக்காரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தபட்டது இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, வசீம் நிஜாமுதீன் போலீஸ் நிலையத்தை அடைந்து இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சரணடந்தார்.

வசீம் சாய்னாவை கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் நன்கு பதிவாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பா..? -ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
மேனேஜரை அறைந்து விட்டு, புடவையில் வந்ததால் அனுமதி மறுப்பு என கூறிய பத்திரிகையாளரின் குட்டை உடைத்த ஓட்டல் நிர்வாகம்
2. நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கும் டெல்லி விமான நிலையம் - வீடியோ
டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
3. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை ஆங்கிலேயர் கால சுரங்கபாதை
டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும்
4. போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ
டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
5. சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
டெல்லியில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த \ 6 பேர் பலியானார்கள்.