தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நிமிடத்திற்கு 27 லட்சம் ஹிட் + "||" + 27 Lakh Hits Per Minute: Government Sources On Vaccine Registration

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நிமிடத்திற்கு 27 லட்சம் ஹிட்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு  நிமிடத்திற்கு  27 லட்சம் ஹிட்
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இணையத்தளத்தில் நிமிடத்திற்கு 27 லட்சம் ஹிட் வருகின்றன் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வரை 14,50,85,911 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்களில் 93,23,439 பேர் முதல் டோஸையும், 60,59,065 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1,21,00,254 பேர் முதல் டோஸையும், 64,11,024 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4,92,77,949 பேர் முதல் டோஸையும், 26,78,151 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 5,05,37,922 பேர் முதல் டோஸையும், 86,98,107 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இணையத்தளப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அத்னபடி முன்பதிவு தொடங்கியது.

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கோவின் இணையத்தளத்தில் இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. நள்ளிரவுக்குப் பிறகு பதிவு செய்யப் பலர் முயன்றும் முடியவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமாங் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மே 1ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ’கோவின்’(CoWin) என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

கோவின் தளம் செயல்படவில்லை என்று பலர்  புகார் செய்தனர், மற்றவர்கள் இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்தனர். மாலை 4 மணிக்கு பதிவுகள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்.திற்குள், இணையத தளம்  முடங்கியது பின்னர் அது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவின் தளத்தில்  ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நுழைந்து உள்ளனர் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலங்கள் மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களால் கிடைக்கக்கூடிய இடங்களின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இணைப்பு  கிடைக்கவில்லை என்றால், தயவுசெய்து சிறிது நேரம் கழித்து மீண்டும்  பதிவு செய்யவும் . உங்கள் பொறுமையையும் புரிந்துணர்வையும் நாங்கள் கோருகிறோம்" என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; 14 பேர் கைது
லண்டனில் ஊரடங்கை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
2. இன்று பிற்பகல் 3 மணி வரை ஒரே நாளில் 47.5 லட்ச தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை
இன்று பிற்பகல் 3 மணி வரை ஒரே நாளில் 47.5 லட்ச கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை ; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா முன்னிலை வகிக்கிறது.
3. வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி
வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு.
4. பாதிப்பு ஆரம்பித்திருக்கும்... 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை-எய்ம்ஸ் தலைவர்
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.
5. அமெரிக்காவுக்கு தப்பி சென்ற சீன உளவுத்துறை துணை அமைச்சர் ; உகான் ஆய்வக தகவல்களை வெளியிட்டார்
சீனாவில் இருந்துதப்பிய சீன உளவுத்துறை துணை அமைச்சர். உகான் ஆய்வகம் பற்றி அனைத்து தகவல்களையும் அமெரிக்காவிடம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.