மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுகிறது; மாநகராட்சி குற்றச்சாட்டு


மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுகிறது; மாநகராட்சி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 May 2021 9:09 PM GMT (Updated: 3 May 2021 9:09 PM GMT)

மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுவதாக மாநகராட்சி குற்றம்சாட்டி உள்ளது.

பற்றாக்குறை

கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மாநிலத்தில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுவதாக மாநகராட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு கொங்கன் மண்டல கமிஷனர் அன்னாசாகிப் மிசலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், திரவ மருத்துவ ஆக்சிஜன் திருப்பிவிடப்படுவதால் மும்பையில் சில ஆஸ்பத்திரிகளில் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறியுள்ளார்.

கண்காணிக்க அதிகாரிகள்

மேலும் இதன் காரணமாக உதவி கேட்டு பல அழைப்புகள் வருவதாகவும், ஒரு நோயாளி வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட சம்பவமும் நடந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

எனவே ஆக்சிஜன் திருப்பிவிடப்படுவதை தடுக்க உள்ளூர் நிர்வாகம் நவிமும்பையில் ஆக்சிஜன் நிரப்பப்படும் 2 நிறுவனங்களில் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டு உள்ளார்.


Next Story