ராஜஸ்தானில் 95 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு


ராஜஸ்தானில் 95 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு
x
தினத்தந்தி 7 May 2021 4:55 AM GMT (Updated: 7 May 2021 4:55 AM GMT)

ராஜஸ்தானில் 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டு உள்ளான்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜலோர் நகர பகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் வயல்வெளி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்துள்ளது.  அதன் அருகே 4 வயது சிறுவன் அனில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

இந்நிலையில், திடீரென 95 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து விட்டான்.  இதுபற்றி அறிந்த அவனது பெற்றோர் அலறினர்.  அவர்களது சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டது.  சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கியது.  தொடர்ந்து 9 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்த மீட்பு பணியில் சிறுவனை மீட்டு உள்ளனர்.


Next Story