ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா


ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 May 2021 12:09 AM GMT (Updated: 9 May 2021 12:09 AM GMT)

தடுப்பூசி போட்டுக்கொண்ட ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ்,

கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

இருப்பினும் கொரோனா நோயாளிகளை தினசரி சந்திக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் விஜயேஷ் பரத்வாஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story