மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 10 May 2021 3:25 AM GMT (Updated: 10 May 2021 3:25 AM GMT)

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியில் இருந்து 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வந்தது.

அந்த வகையில் மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன் படி, மும்பையில் பெட்ரோல், லிட்டர் 97.86 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 89.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

*சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.38 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 91.53 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 82.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 91.66 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 84.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story