‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ.995- ஆக நிர்ணயம்; ஐதராபாத்தில் ஒருவருக்கு போடப்பட்டது


‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ.995- ஆக நிர்ணயம்; ஐதராபாத்தில் ஒருவருக்கு போடப்பட்டது
x
தினத்தந்தி 14 May 2021 9:48 AM GMT (Updated: 14 May 2021 9:48 AM GMT)

ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ. 995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியது.  ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது

மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. 2-ம் கட்டமாக அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் வர உள்ளன. 

இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.  இந்த நிலையில்,  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் முதல் கட்டமாக இன்று போடப்பட்டது. 

ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 


Next Story