வலுவிழந்த டவ்தே புயல் பல மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு


Image courtesy : windy.com
x
Image courtesy : windy.com

குஜராத்தில் சேதத்தை ஏற்படுத்திய டவ்தே புயல் , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

புதுடெல்லி

அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது.

இதில் மும்பையில் 114 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மேலும் 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு ஏராளமான கட்டிட மேற்கூரைகள் பறந்தன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. கடல் கொந்தளிப்பால் பல படகுகள் சேதம் அடைந்தன. சுற்றுலா தலமான கேட்வே ஆப் இந்தியா கடற்கரை பலத்த சேதம் அடைந்தது.

மேலும் புயலில் சிக்கி மும்பையில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தானே, பால்கரில் 5 பேர் பலியாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் மூலம் புயலுக்கு 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத்தில் சேதத்தை ஏற்படுத்திய டவ்தே புயல் , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.மேலும் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளிலும்  மழை பெய்து வருகிறது.

இந்த டவ்தே புயலால்  ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story