தெலுங்கானா சோதனைச் சாவடி விபத்து:சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!


தெலுங்கானா சோதனைச் சாவடி விபத்து:சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!
x
தினத்தந்தி 25 May 2021 8:47 AM GMT (Updated: 25 May 2021 8:47 AM GMT)

சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.


ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம்மச்செரியல் மாவட்டம்   தபல்பூர் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு எப்போதும் வனத்துறை தடுப்பு இருக்கும் கடந்த 22 ந்தேதி

 ஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை  வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி கை அசைத்தார்

அப்படியும் நிற்காமல் வேகமாக வந்த பைக் சோதனைச் சாவடியை நெருங்கியதைப் பார்த்தவுடன் , சோதனைச் சாவடி தடுப்பு கேட்டை வனக்காவலர் தூக்க முயல்கிறார். அதற்குள் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் சோதனைச் சாவடி தடுப்பு கேட் மீது மோதிச் சென்றது.

இதில் வாகனத்தை ஓட்டிச் சென்றவர் குனிந்து உயிர் தப்பி விடுகிறார். ஆனால் பின்னால் அமர்ந்திருந்தவர், சோதனைச் சாவடி கேட் மீது பயங்கரமாக மோதி சம்பவ இடத்திலேயே பலியாகிறார். அப்படி உடன் வந்தவர் பலியான பிறகும் வாகனத்தை ஓட்டியவர் நிற்காமல் தப்பி ஓடி விடுகிறார்.

பலியான இளைஞர் சுதேனி வெங்கடேஷ் கவுட் என்று அடையாளம் காணப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் லக்செட்டிபேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்குமுகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானது. சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு  காரணம் என புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதுபற்றி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள மஞ்சரியால் உதவி காவல் ஆணையர் அகில் மஹாஜன், அந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை செக்போஸ்ட் இயங்கி வருவதாகக் கூறினார்.

மிக அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், தனது தலையை மட்டும் தாழ்த்திக் கொண்டு, பின்னால் அமர்ந்திருந்தவருக்கு விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். விபத்தை ஏற்டுத்திவிட்டு தப்பியோடியவரை ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கைது செய்ததாகவும், அவர் மிகவும் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் கூறினார்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரின் உடலில் 131 எம்ஜி அளவுக்கு அல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த விபத்து மற்றும் உயிரிழப்பில் வனக் காவலர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் வனத்துறை மீது தவறு இல்லை என்பதை சிசிடிவி வீடியோவைப் பார்க்கும் மக்களே கூறுவது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் களப்பணியில் இருக்கும் தங்களுக்கு ஊக்கமளிப்பதாக போலீஸ் உயரதிகாரி அகில் மகாஜன் தெரிவித்துள்ளார்.



Next Story