மும்பை முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு


மும்பை முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 4:12 PM GMT (Updated: 31 May 2021 4:12 PM GMT)

மும்பையில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த மாதம் முதல் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து இன்று 676 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் நாளை முதல் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையின் வலதுபுறம் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இடதுபுறம் உள்ள கடைகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் செயல்படும். இரண்டாவது வாரம் இந்த முறை மாறி செயல்படுத்தப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story