தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + 19,760 new COVID-19 cases in Kerala on Tuesday; death toll breaches 9000-mark

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை  அதிகரிப்பு
கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் நேற்று 12,300- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,760- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24,711- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 426- ஆக உள்ளது.  

கேரளாவில்  தொற்று பாதிப்பில் இருந்து  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 34 ஆயிரத்து 502- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 194- பேர்  உயிரிழந்துள்ளனர். 

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,009- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று ஒருநாளில் மட்டும் 1.30 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் மேலும் 1,546-பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் மேலும் 1,546-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 % ஆக குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - கேரள சுகாதாரத்துறை
கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புளோரிடாவில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புளோரிடா மாகாணத்தில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.