ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது; ராஜஸ்தானில் ரூ.105க்கு விற்பனை


ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது; ராஜஸ்தானில் ரூ.105க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Jun 2021 8:39 PM GMT (Updated: 4 Jun 2021 8:39 PM GMT)

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

புதுடெல்லி, 

கடந்த மாதத்தில் மட்டும் 19 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 28 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.94.76க்கும், டீசல் ரூ.85.66க்கும் விற்பனையாகிறது.

மாநிலங்களின் வரி விதிப்பு வித்தியாசத்தால் தலைநகரத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் பெட்ரோல் டீசல் விலையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் வாட் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் இந்த விலையேற்றம் நிலவுகிறது.

நேற்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. ஆந்திராவில் வைசாக் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ரூ.100க்கு அதிகமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. வைசாக்கில் ரூ.99.75க்கு விற்பனையானது. டீசல் ரூ.94.08க்கு விற்பனையானது. தெலுங்கானாவின் அடிலாபாத்தில் ரூ.100.57க்கும், நிசாமாபாத்தில் ரூ.100.17க்கும், லடாக்கின் லெ நகரில் 100.43க்கும் விற்பனையானது. நாட்டில் அதிகபட்சமாக ராஜஸ்தானின் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.81க்கும், டீசல் ரூ.98.64க்கும் விற்பனையானது.

Next Story