தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது + "||" + India reports 1,14,460 new #COVID19 cases, 1,89,232 discharges, and 2677 deaths in the last 24 hours, as per Health Ministry

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு, இப்போது நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன.

நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 ஆக இருந்தது. நேற்று  1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இந்த நிலையில்,  இன்று கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில்  இருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 232-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 2,677 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 09 ஆயிரத்து 339- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 759- ஆக உள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: ஐ.நா.
உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
2. பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கர்நாடகாவில் மேலும் 4867- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் 3.25 சதவிகிதமாக உள்ளது.
4. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.