மாநிலங்களிடம் 1.19 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு தகவல்


மாநிலங்களிடம் 1.19 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2021 7:51 PM GMT (Updated: 8 Jun 2021 7:51 PM GMT)

மாநிலங்களிடம் 1.19 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சிப்பாதையில் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறத்தொடங்கி உள்ளன. 

இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் மத்திய அரசானது, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னுரிமை பயனாளிகளுக்கு இலவசமாகவும், 18-44 வயதினருக்கு மாநில கொள்முதல் திட்டத்தின்கீழ் விலைக்கும் தடுப்பூசிகளை வினியோகித்து வருகிறது. 

இதுவரையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 24 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்து 60 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் 23 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 489 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் 1 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 925 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story