தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கையிறு மூலம் பத்திரமாக மீட்பு + "||" + People walk on rope to rescue themselves after water level rises in Madhya Pradesh’s Sunar river

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கையிறு மூலம் பத்திரமாக மீட்பு

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கையிறு மூலம் பத்திரமாக மீட்பு
மத்திய பிரதேசத்தில் ஆற்றின் மறுபுறம் சிக்கிய தொழிலாளர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியில் ஓடும் ஆற்றில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதன் மறுபுறத்தில் 4 சிறுவர்கள், சில தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

அங்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர், மேலும் கீழுமாக இரு கயிறுகளை கட்டினர். இதனையடுத்து மேல்பகுதியில் கட்டப்பட்டிருந்த கயிறினைப் பிடித்தபடி கீழே கட்டப்பட்டிருந்த கயிற்றில் நடந்து கரைக்கு வந்து சேர்ந்தனர்.