உத்தரகாண்டில் ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


உத்தரகாண்டில் ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 18 Jun 2021 11:06 PM GMT (Updated: 18 Jun 2021 11:06 PM GMT)

உத்தரகாண்டில் ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்கி தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் பத்ரா, கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது குடும்பத்தினருடன் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த போலீசார், அவர் எம்.எல்.ஏ. என்பதை அறியாமல் அபராதம் விதித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அபராத தொகையை எடுத்து போலீசாரின் முகத்தில் வீசி எறிந்தார். இது வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர் நீரக் காதெய்ட் நேற்று முன்தினம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று கூடினர். தன் கடமையை சரியாகச் செய்ததற்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

Next Story