தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல்: அமரீந்தர் சிங் பேச்சுவார்த்தை + "||" + Punjab CM Amarinder Singh Talks To Rebel Partap Singh Bajwa Ahead Of Sonia Gandhi Meet

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல்: அமரீந்தர் சிங் பேச்சுவார்த்தை

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல்: அமரீந்தர் சிங் பேச்சுவார்த்தை
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி உடைவதை தவிர்க்க அதிருப்தியாளர்களுடன் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.

சண்டிகர்,

பஞ்சாபில் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர். 

கோஷ்டி பூசலால் கட்சி உடைவதை தவிர்க்க தன் அதிருப்தியாளர்களுடன் முதல்-மந்திரி  அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.

தன்னை பகிரங்கமாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வாவை நேற்று முன்தினம் அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார்.