இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் - டுவிட்டர் குறித்து நாடாளுமன்றக் குழு விமர்சனம்


இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் - டுவிட்டர் குறித்து நாடாளுமன்றக் குழு விமர்சனம்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:54 AM GMT (Updated: 19 Jun 2021 4:54 AM GMT)

இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் என்றும் உங்கள் கொள்கையல்ல என்றும் கூறி ட்விட்டர் சமூக தள நிறுவனத்தை நாடாளுமன்றக் குழு கடுமையாக சாடியுள்ளது.

புதுடெல்லி

குறிப்பாக மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்தது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கு மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கணக்குகளில் இருந்து நீல நிற ‘டிக்’ நீக்கப்பட்டது, டூல்கிட் விவகாரம் என பல பிரச்சினைகளில் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது.

சமூக தள நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. விதிகளை பின்பற்றாத காரணத்திற்காக டுவிட்டருக்கான சட்டப்பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் டுவிட்டர் தளத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் பயனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான இந்த குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான பொதுக்கொள்கை மேலாளர் சகுப்தா காம்ரன், சட்ட கவுன்சில் ஆயுஷி கபூர் ஆகியோர் நேற்று இந்த நிலைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நிலைக்குழு விசாரணையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் டுவிட்டர் பா.ஜ.க.வுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையை நம்பியதாக குற்றம் சாட்டினர். கருவூல அல்லாத உறுப்பினர்கள் இதைப் பற்றி பெரிதும் மவுனனமாக இருப்பதால், “தொழில்நுட்ப சிக்கல்களை” தீர்த்து வைக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டுவிட்டருடன் ஒருங்கிணைக்குமாறு குழு கேட்டுக் கொண்டது.

தங்கள் கொள்கையில் உறுதிபட உள்ளதாக மத்திய அரசிடம் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுவின் கடும்  விமர்சனம் வெளியாகியுள்ளது. 

விசாரணையின் பின்னர்  டுவிட்டர் செய்தித் தொடர்பாளர்  வெளியிட்ட ஒரு அறிக்கையில், குழு முன் ஆஜராகும் வாய்ப்பை வரவேற்பதாகக் கூறியதுடன், எங்கள் வெளிப்படைத்தன்மைக் கொள்கைகளுக்கு ஏற்ப ஆன்லைனில் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான பணிகள் குறித்து குழுவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது.  என கூறினார்.

கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை ”. இது "பொது உரையாடலுக்கு சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் எங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் என்றும் உங்கள் கொள்கையல்ல. இந்திய மண்ணின் சட்டதிட்டங்களை மீறியதற்காக டுவிட்டருக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

 இந்த சூழலில் ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அக்குழுவின் காரசாரமான விமர்சனம் வெளியாகியுள்ளது.

Next Story