கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல் மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்


கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல் மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jun 2021 2:17 PM GMT (Updated: 2021-06-19T19:47:48+05:30)

கேரளாவில் இன்று புத்தக வாசிப்பு திருவிழாவை முதல் மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கியுள்ள புத்தக வாசிப்பு திருவிழா, ஜூலை 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி திருவனந்தபுரம் அரசு மாடல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. 

இதில் ஆன்லைன் மூலம் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, புத்தக வாசிப்புத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்க, இது உதவும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் விநியோகத்தை அமைச்சர் பிந்து தொடங்கி வைத்தார்.

Next Story