நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிப்பு


நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 8:02 AM GMT (Updated: 2021-06-23T13:32:23+05:30)

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம், கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

தொடர்ந்து ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story