டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.15 % ஆக சரிந்தது


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 23 Jun 2021 12:19 PM GMT (Updated: 23 Jun 2021 12:19 PM GMT)

டெல்லியில் மேலும் 111- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தில் கடும் பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது.  தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த டெல்லி அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக அங்கு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. நேற்று முன் தினம் 89 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 134- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று டெல்லியில் 111- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  702- பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 33 ஆயிரத்து 366- ஆகவும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 06 ஆயிரத்து 629- ஆகவும் உள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24,940-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 1,797- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெல்லியில் இன்று கொரோனா தொற்று விகிதம் 0.15 சதவிகிதமாக சரிந்துள்ளது. 


Next Story