மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்


மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 24 Jun 2021 3:52 AM GMT (Updated: 2021-06-24T09:22:19+05:30)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. 

 கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 

* டெல்லியில் இன்று பெட்ரோல், லிட்டர் 97.76 ரூபாய்க்கும், டீசல் லிட்டர்88.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* மும்பையில் இன்று பெட்ரோல், லிட்டர் 103.89  ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 95.79 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 98.88 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.89 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொல்கத்தாவில் இன்று பெட்ரோல், லிட்டர் 97.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story