உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத நபர் மீது துப்பாகிச்சூடு


உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத நபர் மீது துப்பாகிச்சூடு
x
தினத்தந்தி 25 Jun 2021 8:09 PM GMT (Updated: 25 Jun 2021 8:09 PM GMT)

முகக்கவசம் அணியாததால் வாடிக்கையாளரின் காலில் வங்கிக் காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் வங்கிக்கு ரயில்வே ஊழியர் ராஜேஷ்  சென்றுள்ளார். முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.  

இதனைக் கண்டு அவரை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய வங்கிக்காவலர் அவரை வங்கிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த வங்கிக் காவலர் ரயில்வே ஊழியர் ராஜேஷின் காலில் தனது துப்பாக்கியில் சுட்டார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வங்கிக் காவலரைக் கைது செய்தனர்.


Next Story