ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு


ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 3:31 AM GMT (Updated: 2021-06-27T09:01:56+05:30)

ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Next Story