தேசிய செய்திகள்

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி + "||" + I wish to assure that everybody will be vaccinated: FM Nirmala Sitharaman, in Bengaluru

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி
நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
பெங்களூரூ,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இது குறித்து பெஙகளூருவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை மற்றும் பாதிப்பு குறித்து தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு முன்கூட்டியே வழங்குகிறது. தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து அனைத்து மாநிலங்களும் கவனிக்கப்படும். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 66.89 கோடி: மத்திய அரசு தகவல்
நாட்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 66.89 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுக்க இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
3. நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை
நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை சமர்பித்துள்ளது.
4. நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் போட வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாகச் போட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.