மத்திய மந்திரி வி.கே.சிங்கை பதவியில் இருந்து நீக்க கோரும் மனு; விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


மத்திய மந்திரி வி.கே.சிங்கை பதவியில் இருந்து நீக்க கோரும் மனு; விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 2 July 2021 7:43 PM GMT (Updated: 2 July 2021 7:43 PM GMT)

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய-சீன எல்லைப் பிரச்சினை குறித்து பேசியதாகவும், அது பதவிபிரமாணத்துக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்து, மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரி, மன்னார்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் ராமசாமி சார்பில் வக்கீல் ஜெயசுகின் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி, அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த கருத்தை விரும்பவில்லை என்றால் அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தீர்வாகாது. மத்திய அமைச்சர் ஏதாவது செய்திருந்தால், அது தொடர்பாக பிரதமர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சரை பதவிநீக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிடுவது பொருத்தமாக இருக்காது என தெரிவித்து, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது, தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தார்.

Next Story