தேசிய செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ உள்பட 25 பேர் கைது + "||" + Matar BJP MLA, 25 others held for gambling in Gujarat resort

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ உள்பட 25 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ உள்பட 25 பேர் கைது
குஜராத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
காந்திநகர்,

குஜராத்தின் கோத்ரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பஞ்ச்மஹால் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிசார்ட்டிற்கு சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ .5.81 லட்சம் ரொக்கம், 9 மது பாட்டில்கள் மற்றும் எட்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.