திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு
x
தினத்தந்தி 3 July 2021 8:16 PM GMT (Updated: 3 July 2021 8:16 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியம் செய்யப்படும் முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில் 
தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது. முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வருகிறது
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் 
அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது. ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக 
அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

Next Story