ஊரடங்கு தளர்வுகள் அமல் - லடாக்கில் குவியும் சுற்றுலா பயணிகள்


ஊரடங்கு தளர்வுகள் அமல் - லடாக்கில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 10 July 2021 6:00 AM GMT (Updated: 10 July 2021 6:00 AM GMT)

லடாக்கில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

லடாக்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது வைரஸ் பரவல் குறையத்தொடங்கியுள்ளதால் லடாக்கில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லடாக்கிற்கு சுற்றுலா வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதல் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதலை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், லடாக்கில் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லடாக்கில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் லே பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story