தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது + "||" + India reports 37,154 new COVID19 cases, 39,649 recoveries, and 724 deaths in the last 24 hours, as per Health Ministry

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கொரோனா உயிர்ப்பலி மீண்டும் 1000-க்குள் வந்தது. தினசரி பாதிப்பும் சற்றே சரிந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்து 154 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 08 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும்724 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,08,764  ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 39,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 00 லட்சத்து 14 ஆயிரத்து 713 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.20 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,50,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 501 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
4. தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.