பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்


பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 12 July 2021 6:51 AM GMT (Updated: 12 July 2021 6:51 AM GMT)

பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகளை தாக்கி மனைவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

கண்ணூர்

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 40 வயதான பெண்ணும் அவரது கணவரும்  பழனியில் அடையாளம் தெரியாத கும்பலால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் அந்தப் பெண்ணிடம்  விசாரித்தபோது கடந்த மாதம் 20ந்தேதி பழனி கோயிலுக்கு சென்ற போது தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறினார். உடனடியாக கண்ணூர் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,பாதிக்கபட்ட அந்த பெண்ணும் அவரது கணவரும்  கடந்த 19ஆம் தேதி பழனி கோயிலுக்கு சென்றுள்ளனர். 20 தேதி அவரது கணவர் உணவு வாங்க  சென்ற போது மூன்று பேர்  அந்த பெண்ணை கடத்திச்சென்று அருகே இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  அதில் விடுதி மேலாளரும் ஒருவர் ஆவார்.கணவர் விடுதியில் சென்று கேட்டபோது , மேலாளர் மற்றும்  கும்பலால் தாக்கப்பட்டு உள்ளார்.

அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது மர்ம பாகங்களில் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது போலீசார், மனுவை வாங்க மறுத்து அனுப்பியதாகவும்  கூறியுள்ளார். 

இது குறித்து கண்ணூர் போலீசில் பாதிக்கபட்ட பெண்ணும் அவரது கணவரும் புகார் அளித்து உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி போலீஸ்  துணை போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

தலசேரி துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி), மூசா வள்ளிகாதன் இது குறித்து கூறியதாவது;-

நாங்கள் வழக்கை விசாரித்து வருகிறோம், அவர்கள் பழனி போலீசில் புகார் செய்ததாகவும், அந்த குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்றும், வேலை காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் தங்கியிருப்பதாகவும் அவர்கள் எங்களிடம் கூறினர்.

"நான் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அறிக்கையைப் பார்த்தேன், ஆனால் காயங்கள் எதுவும் இல்லை புகார் அளித்தவர்களின் கூற்றுப்படி, ஜூன் 20 அன்று சம்பவம் நடந்ததாக கூறப்படுவதால்  காயங்கள் குணமாகி இருக்க கூடும்.

தற்போது பரியாராமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கப்படுவார்கள். மேலதிக விசாரணைகளுக்காக இந்த விவரங்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக என தெரிவித்தார்.

Next Story